அம்மா :-
- நான் பார்த்த முதல் தெய்வம் என் அம்மா
- அடி முடி தேடினாலும் அகராதியை புரட்டினாலும் முழுமையான அர்த்தம் அறிய முடியாத உயிர் சித்திரம் அம்மா
- நான் பார்த்த முதல் முகம்! நான் பேசிய முதல் வார்த்தை! நான் மறக்கவே முடியாத முதல் ஓவியம் அம்மா...!!!
- அம்மா நீ தேன் நான் அதன் சுவை நீ கவிதை நான் சொற்கள் நீ மலை நான் மழைத்துளி நீ வானவில் நான் அதன் வர்ணம் நீ கடடவுள் நான் உன் படைப்பு
- என்னை சுவாசிக்க வாய்த்த அவளுக்காக நான் வாசித்த முதல் கவிதை அம்மா
- இதயம் உடல் இல்லாத உயிர் உன் கருவறையில் நான்
- மூச்சடக்கி ஈன்றவள் என்னை அம்மா மூச்சுள்ளவரை காப்பேன் உன்னை
- அன்பின் ஸ்பரிசம் , கவின் நேசம் , மனதின் கீதம் , தாயின் பாதம்
- இருட்டறையில் இருந்த என்னை வெளிச்சம் என்னும் தோற்றத்திற்கு கொண்டுவந்த உறவு தான் என் அம்மா
- நான் வாசித்த கவிதைகளில் என்னை யோசிக்க வைத்த வரி அம்மா சுவாசித்த இதயங்களில் நேசிக்க வாய்த்த இதயம் அம்மா
- நிம்மதி தேடிச்செல்லும் நாம் எவ்வளவு பணம் செலவு செய்தலும் கிடைக்காத ஒரு நிம்மதியான இடம் நம் அம்மாவின் மாடி மட்டும் தான்
- நம் பிறப்பிற்கும் இறப்பிற்கும் ஓர் ஒற்றுமை உண்டு இரண்டிலும் முதலில் அழவைப்பது நம் தாயை
- பிறப்பின் பாலிலே எதிர்ப்பின் சக்தியை கொடுத்த உன்னை எப்படி எதிர்ப்பேன் அம்மா என் வாழ்வில்
- அம்மா இவள் உயிர் உள்ளவரை உன்னை தன் கைகளால் ஏந்துவாள் இன்று உன்னை கைகளில் ஏந்தியவளை நாளை மற்றவரிடம் நீ கையேந்த வைத்து விடாதே!
- அன்பை எனக்கு அறிமுகப்படுத்தி! இன்றுவரை அளவின்றி அளிப்பவள் நீதானே அம்மா
- சிறுபிள்ளைத் தனமாக தவறுகள் செய்தால்! பிறரைப் போல தண்டிக்காமல்! சரியானத்தைச் சொல்லி கண்டித்து! அழுது நடித்தால்! அதையும் மன்னிப்பவள் நீதானே அம்மா!
- சமைக்கும் அனைத்து உணவிலும் அன்பையும்! அதன் சுவையை அதிகரிப்பவள் நீதானே அம்மா
- என் உடலில் ஏற்படும் காயத்தின் வலிகளை! மனதில் உணர்பவள் நீதானே அம்மா
- என் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக! உன் தேவைகளை குறைத்துக்கொண்டவள் நீதானே அம்மா!
- அன்பு என்ற தலைப்பில் மிகச்சிறிய கவிதை கேட்டார்கள் அம்மா என்றேன் உடனே.... கேட்டது அம்மாவாக இருந்தால்? இன்னும் சின்னத்தை சொல்வேன் நீ என்று
- கல்லில் செதுக்கிய உருவத்தை விட என்னை கருவில் சுமந்த தாயே சிறந்தவள்
- ஆயிரம் சொந்தங்கள் அனைத்திட இருந்தாலும் அன்னையே உன்னைப் போன்று அன்பு செய்ய யாரும் இல்லை இவ் உலகில்
- எல்லா குற்றங்களையும் மன்னிக்கும் ஒரே நீதிமன்றம் அம்மாவின் இதயம்
- மின்னல் மின்னும் போது அம்மாவை கட்டி அணைக்கும் குழைந்தைக்குத் தெரிகிறது அம்மா அதை விட பெரிய சக்தி என்று
- அம்மா நான் இன்று இறக்கவும் தயாராக இருக்கிறேன் நீயே நாளையும் என்னை கருவில் சுமக்கும் என் தாயானால்
- அம்மா உனக்கு வலி கொடுத்து பிறந்த காரணத்தினால்தானோ என்னவோ எனக்கு வலி ஏற்படும் போதெல்லாம் உன்னையே அழைக்கிறேன் அம்மா என்று
- தாய்மையின் வலி என்னவென்று எனக்கும் தெரியும் அதனால் தன அன்று அம்மாவுடன் சேர்ந்து நானும் அழுதேன் நான் பிறக்கையில்
- மூன்றெழுத்து கவிதை சொல்லச் சொன்னால் முதலில் சொல்வேன் அம்மா என்று!!!
- நண்பர்கள் : கடவுள் கொடுத்த வரம் அம்மா : வரமாய் வந்த கடவுள்
- ஆயிரம் உறவு அவனியிலே கிடந்தாலும் அன்னையின் உறவுக்கு ஈடாகுமா
- கண்கள் பணிக்கும் போதெல்லாம் நெஞ்சம் நினைக்கும் ஒரே உறவு அம்மா
- மரியாதையாய் நடக்க கற்றுக்கொடுத்தவர் என் அன்னை
- வனத்திற்கு அழகு நிலா பூமிக்கு அழகு என் அம்மா
- நாம் திரும்ப அமரமுடியாத ஆசனம் அன்னையின் கருவறை
- இப்பூவுலகில் பெற்றோரை தவிர வேறு தெய்வமில்லை
- இரவும் பகலும் இமைமூடாமல் என் வாழ்க்கையைப் பற்றி எண்ணி கொண்டிருக்கும் என் அம்பு தாய் தந்தைக்கு என்றும் கடமைப் பட்டு வாழ்வேன்
- நான் வளரும் ஒவொரு நொடியும் உனக்கு பாரம் தான் தெரிந்தும் சுமக்கிற பாத்து மதம் வரை அல்ல உன் ஆயுள் காலம் வரை
- ஒவொரு நாளும் கவலைப்படுவாள் ஆனால் ஒரு நாளும் தன்னைப் பற்றி கவலை பட மாட்டாள் அம்மா
- என் மனதை மயக்கிய முதல் இசை என் தாயின் இதய துடிப்பு
- கோவில் கட்டி பூஜை செய்யப்படாத ஒரே தெய்வம் தாய் மட்டுமே
- என் உள்ளத்தின் உள்ளே வாழும் ஓர் உன்னதமான தெய்வம் என் அம்மா
Super duper Anna heart touching one
ReplyDeletethank you so much da ma
DeleteSuppar Amma Amma anru asaththitta
Deleteஅம்மா என்றாலே போதும் கமெண்ட் .எதற்கு
ReplyDeleteunmai
Deleteஅம்மா இதற்கு ஈடு இனையே இல்லை
ReplyDeleteunmai
Deletegood...
ReplyDeleteஎன்னை எழுதியவள் நீ உன்னைப் பற்றி நான் என்ன எழுதுவேன் என் தாயே
ReplyDeleteஎன் உலகம் நீ உயிரும் நீ